Published : 27 Feb 2023 11:09 AM
Last Updated : 27 Feb 2023 11:09 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 2 வாக்குச்சாவடிகள் அருகே பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சரியாக இன்று (பிப்.27) காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இத்தேர்தலில் வாக்களிக்க 2.27 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காலை 9 மணி வரை 10.10% வாக்குப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் 2 வாக்குச்சாவடிகள் அருகே பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை இந்தப் புகாரை அளித்துள்ளார். அதில், அசோகபுரத்தில் உள்ள 138 மற்றும் 139 வது வாக்குச்சாவடிகளில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் அளித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை இந்தப் புகாரை அனுப்பி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT