Published : 26 Feb 2023 02:50 PM
Last Updated : 26 Feb 2023 02:50 PM

ரூ.600 கோடி செலவில் தாம்பரம் ரயில் நிலையம் மேம்படுத்தப்படும்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

செங்கல்பட்டு: தாம்பரம் ரயில் நிலையம் ரூ.600 கோடி செலவில் பிரம்மாண்டமான முறையில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படவுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் இருமார்க்க தேஜஸ் விரைவு ரயில், தாம்பரத்தில் நிற்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், சென்னையிலிருந்து மதுரைக்கு இருமார்க்கத்திலும் இயக்கக் கூடிய தேஜஸ் விரைவு ரயில், இன்று (பிப்.26) முதல் சோதனை அடிப்படையில் 6 மாத காலங்களுக்கு தாம்பரத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டிருந்தார்.

இதன் தொடக்க விழா தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், திமுக எம்பி டி.ஆர்.பாலுவும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுகவினரும், பாஜகவினரும் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.840 கோடி செலவில் சர்வதேச அளவில் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல, கிட்டத்தட்ட ரூ.600 கோடி செலவில் பிரமாண்டமான முறையில் உலகத்தரத்தில் தாம்பரம் ரயில் நிலையம் மேம்படுத்தப்படவுள்ளது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x