Last Updated : 13 Sep, 2017 11:40 AM

 

Published : 13 Sep 2017 11:40 AM
Last Updated : 13 Sep 2017 11:40 AM

மும்மதமும் சங்கமித்த காவிரி துலாக் கட்டம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று தொடங்கிய காவிரி மகா புஷ்கரம் விழாவையொட்டி துலாக் கட்டத்தில் ஏராளமான இந்துக்கள் புனித நீராடினர்.

மேலும், ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்கள் நீராடும் முன் சூரிய நமஸ்காரம் செய்தும், காவிரித் தாய்க்கு ஆரத்தி காட்டியும் வழிபட்டனர்.

துலாக் கட்டத்தின் தென்பகுதியில் காவிரித் தாய்க்கு 8 அடி உயரத்தில் புதிய கருங்கல் சிலையை மயிலாடுதுறையைச் சேர்ந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஜெனிபர் பவுல்ராஜ் நிறுவினார். காவிரித் தாய் மீது கொண்ட பற்றுதல் காரணமாக அவர் இந்த சிலையை நிறுவினார். நேற்று இந்தச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும், காவிரி மகா புஷ்கரம் விழாவையொட்டி நேற்று நடைபெற்ற துறவியர் மாநாட்டின் தொடக்கத்தில், நாகை மாவட்டம் மங்கைநல்லூரைச் சேர்ந்த முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த கிங் பைசல் குழுவினர் சிவசக்தி ருத்ர தாண்டவ நிகழ்ச்சியை தத்ரூபமாக வழங்கினர். இதில், கிங்பைசல் சிவன் வேடம் அணிந்து சிவதாண்டவம் ஆடியதை துறவிகள், ஆன்மிக பெரியோர்கள் ரசித்துப் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x