Published : 25 Feb 2023 06:44 AM
Last Updated : 25 Feb 2023 06:44 AM

காரல் மார்க்ஸ் குறித்து அவதூறு பேச்சு: ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில்சென்னை, சைதாப்பேட்டை சின்னமலை, ராஜீவ் காந்தி சிலை அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: தேசத்தின் வளர்ச்சிக்குப் பாதிப்பைஏற்படுத்தியது காரல் மார்க்ஸ் சிந்தனைதான் என்று, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இதற்கு, இந்தியகம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளைச் சேர்ந்தோரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆளுநர் ரவியைக்கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமை வகித்தார்.

ஏஐடியுசி பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர்கள் மு.வீரபாண்டியன், பெரியசாமிமற்றும் மாதர் சங்கத்தினர், மாணவர்அமைப்பினர் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு. ஆளுநர்கூறிய கருத்தை திரும்பப் பெறவலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர், இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும், சட்டப்பேரவைக்கும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அரசியலமைப்புச் சட்டம், மதச்சார்பின்மைக் கொள்கைகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். தற்போது உலக மாமேதை என்று போற்றப்படுகிற காரல் மார்க்ஸ் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார்.

மார்க்ஸ் கூறிய கருத்துகளுக்கு நேர்மாறாக, காரல் மார்க்ஸால்தான் இந்தியாவில் ஜாதி, ஏழ்மை இருக்கிறது என்ற கருத்தை ஆளுநர் முன்வைத்துள்ளார். அவரது கருத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். வரும் 28-ம் தேதி தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

காரல் மார்க்ஸ் குறித்த தனதுநிலையை ஆளுநர் ரவி மாற்றிக்கொள்ள வேண்டும். அவர் கூறியகருத்தை திரும்பப் பெற வேண்டும். உலக மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இதேநிலை தொடர்ந்தால், அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி, கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். அதனால்ஏற்படும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு ஆளுநர்தான் பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x