Published : 25 Feb 2023 06:16 AM
Last Updated : 25 Feb 2023 06:16 AM

சென்னை | போக்குவரத்துக்கு இடையூறின்றி இரவு நேரங்களில் சாலை தூய்மைப் பணி

சென்னை: போக்குவரத்துக்கு இடையூறின்றி இரவு நேரங்களில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறையின் மூலம் சென்னையில், இரவு நேரங்களில் சுமார் 569.28 கி.மீ. நீளமுள்ள 501 பேருந்து சாலைகள் மற்றும் இதர முக்கிய சாலைகளில் தூய்மைபணிகள் நடைபெற்று வருகின்றன.

2,187 தூய்மைப் பணியாளர்கள்: இதற்காக இப்பகுதிகளில் பேட்டரியால் இயங்கும் 367 வாகனங்கள், 61 மூன்று சக்கர வாகனங்கள், 154 கம்பாக்டர் வாகனங்கள், 51 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள், 10 டிப்பர் லாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2,187 தூய்மைப் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டு இரவு நேரதூய்மைப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இப்பணிகளை கண்காணிக்க மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இரவு நேரங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களின் வருகை, குப்பைகள் சேகரிக்கும் பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வாகனங்கள், காம்பாக்டர் வாகனங்கள் மற்றும் மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் பயன்பாடு உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல, சாலையின் இருபுறங்களிலும் உள்ள மணல் மற்றும்குப்பையை மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களைக் கொண்டு சுத்தம் செய்வது, அனைத்து தூய்மைப் பணிகளையும் இரவிலேயே முடித்து போக்குவரத்துக்கு இடையூறின்றி பணிகளை நிறைவேற்றுவது ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x