Published : 24 Feb 2023 07:39 PM
Last Updated : 24 Feb 2023 07:39 PM
கும்பகோணம்: கும்பகோணம் கவுதமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.9 கோடி மதிப்பிலான இடம் மீட்கப்பட்டது.
கும்பகோணம் கவுதமேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம், கும்பகோணம் வட்டம் சாக்கோட்டை, சீனிவாசன் நகர் பின்புறம் இருந்து வந்தது. இந்த இடத்தை தனிநபர் ஒருவர் தனது பெயரில் பட்டா மாற்றி பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக புகார் எழுப்பப்பட்டது. இதனை அறிந்த அறநிலைத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் (பொறுப்பு) ப.ராணி, செயல் அலுவலர் சி. கணேசமூர்த்தி தனி வட்டாட்சியர் முருகவேல், நில அளவையர் சுகுமாரன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் கோயில் பணியாளர்கள் அந்த இடத்தை போலி பட்டா வைத்திருந்த நபரிடமிருந்து மீட்டனர்.
இன்று அந்த இடத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைத்து, எச்சரிக்கை பலகையை நட்டனர்.மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.9,28,80,000 என அறநிலையத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT