Published : 28 May 2017 10:12 AM
Last Updated : 28 May 2017 10:12 AM

ராமமோகன ராவ் மீதான புகாரை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க தமிழக அரசு உத்தரவு

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த பி.ராமமோகன ராவ் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் கடந்த டிசம்பர் 21-ம் தேதி சோதனை நடத்தினர். திருவான்மியூரில் மகன் விவேக் வீடு, ஆந்திராவில் உள்ள சம்பந்தி வீடு, உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள், தலை மைச் செயலகம் என 14 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராமமோகன ராவின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மற்றும் சித்தூர் லட்சுமி நகர், பெங்களூருவில் உள்ள உறவினர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை வளசரவாக்கத்தில் ராமமோகன ராவ் நண்பரும், வழக்கறிஞருமான அமலநாதன் வசிக்கிறார். அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பணம், தங்கம், அசையும் மற்றும் அசையா சொத்துகள் என பல கோடி அளவுக்கு சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

முன்னதாக, பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரரும், தொழிலதி பருமான சேகர் ரெட்டி வீட்டில் வருமானவரி, அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த டிசம்பர் 8-ம் தேதி சோதனை நடத்தினர். இதில், ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இவர் முக்கிய அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்களுக்கு நெருக்கமான வர். அரசு கட்டிட ஒப்பந்தம், மணல் குவாரி ஒப்பந்தம் போன்ற அரசு ஒப்பந்தங்களை எடுத்து செய்துவந் தார். இவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ராமமோகன ராவ் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சேகர் ரெட்டிக்கு அரசு ஒப்பந்தங்களை பெற்றுக் கொடுப்பதில் ராமமோகன ராவ் உதவி செய்தது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது.

சோதனையில் கிடைத்த ஆதா ரங்களை தமிழக அரசுக்கு வருமான வரித் துறை அனுப்பியது. இதை வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தமிழக அரசை வருமானவரித் துறை கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து ராமமோகன ராவ் வீட் டில் நடத்தப்பட்ட சோதனை விவரங் கள் குறித்தும், வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்து வாங்கி னாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தும்படி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரக அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘ராமமோகன ராவ் மீதான புகார் குறித்து விசா ரணை நடத்த தனிக்குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவின் விசா ரணை ஆரம்ப நிலையில்தான் உள் ளது. விசாரணை முடிவில், தவறு நடந்திருப்பது உறுதிசெய்யப்பட் டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். ராம மோகன ராவிடம் இதுவரை நாங்கள் விசாரணை நடத்தவில்லை’’ என்றனர்.

தலைமைச் செயலாளர் பதவி யில் இருந்து நீக்கப்பட்ட ராம மோகன ராவ், தற்போது தொழில் முனைவோர் வளர்ச்சி நிறுவன இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x