Published : 22 Feb 2023 10:38 AM
Last Updated : 22 Feb 2023 10:38 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | நாம் தமிழர் வேட்பாளர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்தன், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.இதனையொட்டி கட்சிகள் பரஸ்பரம் ஒருவர் மீது மற்றொருவர் புகாரும், குற்றச்சாட்டுகளும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மேனகா நவநீதன் மீது இரண்டாவதாக ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. மனு தாக்காலின் போது அனுமதி பெறாமல் ஊர்வலமாக வந்து தொடர்பாக ஏற்கெனவே அவர் மீது தேர்தல் பிரிவு அலுவலர்கள் புகார் படி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது வழக்கு விவரம்: இறுதிக்கட்ட பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெறும் சூழலில், நேற்று முன்தினம் மதியம் மரப்பாலம் பகுதியில் மேனகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சென்றனர் .அப்போது அங்கு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவாக சீமான் பேசியது குறித்து சர்ச்சை எழுந்தது இரு தரப்பினர் வாக்குவாதம் செய்தனர். இதனால் தங்கள் பகுதியில் ஓட்டு சேகரிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியினரை தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் அதே பகுதியில் வேறு வீதியில் வீடு வீடாகச் சென்று நாம் தமிழர் கட்சியினர் நோட்டீஸ் விநியோகித்து ஓட்டு சேகரித்தனர். இதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்று பறக்கும் படையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின்படி வேட்பாளர் மேனகா உள்பட 24 பேர் மீது சூரம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT