Published : 18 Feb 2023 06:47 PM
Last Updated : 18 Feb 2023 06:47 PM
மதுரை: மதுரை மத்திய சிறையில் பணியாற்றும் சிறைக் காவலர்கள் 16 பேருக்கு தமிழக முதல்வரின் சிறப்பு பணி பதக்கத்தை தமிழக சிறைத் துறை துணைத் தலைவர் பழனி சனிக்கிழமை (பிப்.18) வழங்கி பாராட்டினார்.
தமிழக சிறைத்துறையில் சிறப்பாக பணிபுரிந்த சிறைக் காவலர்களுக்கு தமிழக முதல்வரின் சிறப்பு பணி பதக்கம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது அறிவிக்கப்பட்டது. இதற்காக, தமிழக சிறைக் காவலர்கள் மொத்தம் 60 பேர் 45 ஆண் சிறைக் காவலர்கள், 15 பெண் சிறைக் காவலர்கள் உள்பட மொத்தம் 60 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சிறைக் காவலர்களின் மெச்சத்தகுந்த பணியை பாராட்டும் வகையில் சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் புஜாரி, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதில் மதுரை மத்திய சிறைகளில் பணிபுரியும் 14 ஆண் சிறைக் காவலர்கள், 2 பெண் சிறைக் காவலர்கள் உள்பட மொத்தம் 16 பேருக்கு சிறைத்துறை இயக்குநர் அமரேஷ் பூஜாரி பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இதையடுத்து இன்று மதுரை மத்திய சிறை கவாத்து மைதானத்தில் வாராந்திர அணி வகுப்பு நிறைவு பெற்றபின் மதுரை சரக சிறைத் துறை துணைத் தலைவர் பழனி, 16 காவலர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின்போது, மதுரை சிறைக்கண்காணிப்பாளர் (பொறுப்பு) வசந்தகண்ணன், சிறை அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT