Published : 18 Feb 2023 01:13 PM
Last Updated : 18 Feb 2023 01:13 PM
சென்னை: கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் இறந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். மேலும் அரசு அறிவித்த நிவாரணத்தை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ராஜா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் இறந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் 1/2
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) February 18, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT