Published : 18 Feb 2023 09:28 AM
Last Updated : 18 Feb 2023 09:28 AM
சென்னை: ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தமிழ்நாடு நெடுஞ்சாலை திட்டப்பணிகள் இயக்குநருமான கதிரவன் (52) மாரடைப்பால் காலமானார்.
குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுபயிற்சி துணை ஆட்சியராக 2002-ம்ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார் கதிரவன். தொடர்ந்து கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் ஆகியஇடங்களில் வருவாய் கோட் டாட்சியராக பணியற்றினார்.
கடந்த 2013-ம் ஆண்டு ஐஏஎஸ்அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். அதையடுத்து சேலம் ஆவின் பொது மேலாளராகவும், மதுரைமாநகராட்சி கமிஷனராகவும், கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டஆட்சியராகவும் பணியாற்றினார். அதைத்தொடர்ந்து சேலம் மேக்னசைட் பொது மேலாளராக பணிபுரிந்த அவர், தற்போது சென்னையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைதிட்டப்பணிகள் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.
நேற்று (17-ம் தேதி) அதிகாலை அவருக்கு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு தேன்மொழி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். நேற்று சென்னையில் இருந்து எடுத்து வரப்பட்ட அவரது உடல்நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே காந்திபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் தமிழக அரசின் சார்பில் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாலை 6 மணியளவில் காந்திபுரம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
முதல்வர் இரங்கல்: ஐஏஎஸ் அதிகாரி கதிரவன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் கதிரவன் ஐஏஎஸ் உடல் நலக் குறைவால்மறைவெய்திய செய்தி கேட்டுஅதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT