Published : 18 Feb 2023 08:43 AM
Last Updated : 18 Feb 2023 08:43 AM
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட ராஜகோபால் தோட்டம், தேர்முட்டி, மோசிகீரனார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி மூன்றாவது நாளாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது, எந்த வேட்பாளரும், வாக்காளரைச் சந்தித்து வாக்கு கேட்க முடியும்.ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் வாக்காளர் களை திமுகவினர் அடைத்து வைக்கின்றனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும், தேர்தல் ஆணையம் முழுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலை நீடித்தால், வாக்காளர்கள் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் கொட்டகைகளுக்கு, வேட்பாளருடன் நானே நேரில் சென்று வாக்கு சேகரிப்பேன். கூடாரங்களில் வாக்காளர்களை அடைத்து வைத்தால் அதிமுகவின் வெற்றியைத் தடுக்க முடியுமா?
பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, பேனா நினைவுச்சின்னத்தை கடலில் வைக்கவுள்ளனர். கருணாநிதி நினை விடத்தில், ரூ.2 கோடியில் நினைவுச்சின்னம் வைத்துவிட்டு, மீதமுள்ள 79 கோடியில் ஏழை மாணவர்களுக்கு எழுதும் பேனா கொடுக்கலாம்.
பொதுத்தேர்தலின்போது, பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை, சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவதாக திமுகவினர் வாக்குறுதி அளித்தனர். எனவே, தற்போது வாக்கு கேட்க வரும் அமைச்சர்களிடம் 21 மாதத்துக்கு உங்களுக்குச் சேர வேண்டிய ரூ.23 ஆயிரத்து 100- ஐ கொடுக்குமாறு கேளுங்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒருபேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு என்பதுதான், திராவிட மாடல் ஆட்சி.
ஈரோட்டில் பிரச்சாரம் செய்த எம்பி கனிமொழி, ‘அதிமுக வெற்றி பெறாது’ என ஜோசியம் சொல்கிறார். திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த ராசா, எம்.பி. கனிமொழி ஆகியோர் ‘2ஜி’ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த வழக்கு தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் ஏற்கெனவே இருந்த சிறைக்கு செல்வார்கள்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. 5 நாட்களில் 25 கொலைகள் நடந்துள்ளன. பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அமைச்சர் நாசர் கல்எறிகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ‘கையை வெட்டுவேன்’ என பேசுகிறார். உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களே இப்படி நடந்து கொள்கின்றனர். போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது.காவல்துறையைச் சேர்ந்தவர் களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ள போது, சாதாரணமக்கள் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். 21 மாத ஆட்சிக்காலத்தில் கொள்ளையடித்த பணத்தை கொடுத்து திமுகவினர்உங்களை ஏமாற்றப் பார்க்கி ன்றனர். அதை வாங்கிக்கொண்டு, பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு, இடைத் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment