Last Updated : 30 May, 2017 12:37 PM

 

Published : 30 May 2017 12:37 PM
Last Updated : 30 May 2017 12:37 PM

இந்துத்துவா எதிர்ப்பாளர்கள் மத்திய அரசு வழக்கறிஞர்களாக நியமனம்: பா.ஜ.க., இந்து முன்னணி வழக்கறிஞர்கள் அதிருப்தி

மத்திய அரசின் சில துறைகளில் இந்துத்துவா எதிர்ப்பாளர்கள் வழக்கறிஞர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இதனால் பா.ஜ.க., இந்து முன்னணி வழக்கறிஞர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது ஆளும் கட்சி வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். மத்தியில் பா.ஜ.க. அரசு 5 ஆண்டுகள் பதவி காலத்தில் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

மத்திய அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டுக்குப் பிறகே பா.ஜ.க., இந்து முன்னணி, அகில பாரத வழக்க றிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டனர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு வழக்கறிஞர்கள் 42 பேர் உள்ளனர்.

உயர் நீதிமன்றங்களில் மத்திய அரசு சார்பில் ஆஜராக தனி வழக்கறி ஞர்கள் நியமிக்கப்படுவதுபோல், மத்திய அரசு துறைகளுக்கும் தனி வழக்கறிஞர்கள் நியமிக் கப்படுகின்றனர். வருமான வரி, சுங்கம், கலால் உள்ளிட்ட சில துறைகளில் எழுத்துத் தேர்வு மூலம் வழக்கறிஞர்கள் நியமிக் கப்படுகின்றனர். ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, சி.பி.எஸ். இ., துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மத்திய அரசு பரிந்துரையின்பேரில் வழக் கறிஞர்கள் நியமனம் செய்யப் படுகின்றனர்.

மத்திய அரசு வழக்கறிஞர் பதவி கிடைக்காத சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த வழக் கறிஞர்களை மத்திய அரசு துறை வழக்கறிஞர்களாக நியமிக்க மத்திய அரசுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் அனுப்பப்பட்டது. பதவி காலம் முடிந்தும் மத்திய அரசு வழக்கறிஞர்களாக நீடிக்கும் இந்துத்துவா எதிர்ப்பாளர்களை பதவி நீக்கம் செய்யவும் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மத்திய அரசு மீது பா.ஜ.க., இந்து முன்னணி வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந் நிலையில், மத்திய அரசு துறைகள் சிலவற்றில் இந்துத்துவா எதிர்ப்பாளர்கள் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது பாஜக, இந்து முன்னணி வழக்கறிஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தான் மத்திய அரசின் 3 ஆண்டுகள் சாதனையா? என பா.ஜ.க. ஆதரவு வழக்கறிஞர்கள் வேதனை தெரி வித்துள்ளனர்.

இது குறித்து உயர் நீதிமன்ற கிளை பா.ஜ.க. ஆதரவு வழக்கறிஞர் ஒருவர் கூறியது: மத்திய அரசு துறைகள் சார்பில் 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை நியமிக்க முடியும். இந்தப் பதவிகளில் நியமிக்க வேண்டிய பா.ஜ.க. வழக்கறிஞர்கள் பட்டியல் ஏற்கெனவே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே தூத்துக்குடி துறைமுகக் கழக வழக்கறிஞர்களாக இரண்டு பேர் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பா.ஜ.க.வை சேராதவர்கள். மேலும் இந்துத்துவா, சங்க்பரிவாரை கடுமையாக விமர்சிப்பவர்கள். இந்துத்துவா, சங்பரிவார் எதிர்ப்பு உணர்வு கொண்டர்கள் மத்திய அரசு வழக்கறிஞர்களாக எப்படி நியமிக்கப்படுகின்றனர்? என்பது தெரியவில்லை. கட்சியினருக்கு பதவி வேண்டும், பதவியில் தொடரும் கட்சி எதிர்ப்பாளர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்தியும் பலன் இல்லை. மத்தியில் எங்கள் ஆட்சி நடைபெறுகிறது என சொல்வதற்கு வெட்கப்படுகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x