Published : 05 May 2017 08:50 AM
Last Updated : 05 May 2017 08:50 AM
சென்னை மாநகராட்சி சார்பில், வீட்டில் உருவாகும் சமையல் கழிவில் இருந்து இயற்கை உரம் தயாரித்து விற்கப்படுகிறது. இதனால் குப்பை கிடங்குகளுக்கு செல்லும் குப்பையின் அளவு 25 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் குப்பைகளை, விலை மதிப்புள்ள பொருட்களாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, குப் பைகளைக் கொண்டு பயோ காஸ் தயாரிக்கப்பட்டு வரு கிறது. அடுத்தகட்டமாக, சமை யல் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. அண்ணா நகர், தேனாம்பேட்டை, மணலி, அம்பத்தூர் உள்ளிட்ட மண்ட லங்கள் இயற்கை உரம் தயாரிப் பில் முன்னணியில் உள்ளன. இவர்கள் தயாரிக்கும் இயற்கை உரம் கிலோ ரூ.20 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று அம்பத்தூர் மண்ட லத்தில், கொரட்டூர் ரயில் நிலையம் உள்ளிட்ட 10 மையங்களில் இந்த இயற்கை உரம் விற்கப் பட்டது. தேனாம்பேட்டை மண்ட லத்தில் மெரினா கடற்கரையில் விற்கப்படுகிறது. இது பொது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இயற்கை உரம் வாங்கிய கொரட்டூரைச் சேர்ந்த வசந்தி என்பவர் கூறும்போது, “ஏற்கெனவே நாங்கள் தோட்டக் கலைத் துறை சார்பில் வழங்கிய மாடித் தோட்டம் தொகுப்பை வாங்கிவந்து கத்தரி, வெண்டை போன்றவற்றை மாடியில் பயிரிட்டு வருகிறோம். அந்த செடிகளுக்கு இயற்கை உரம் எங்கு கிடைக்கும் என்று தேடிக் கொண்டிருந்தேன். இந்நிலை யில், மாநகராட்சி இயற்கை உரத்தை விற்பதை அறிந்தேன். அதனால் அதை வாங்க வந்துள்ளேன். இந்த விற்பனை குறித்து மேலும் விளம்பரப் படுத்தினால், என்னைப் போன்ற வர்களுக்கு உதவியாக இருக் கும்” என்றார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த உரத்தை பரிசோதித் ததில், இயற்கை உரத் துக்கே உரித்தான அனைத்து குணங்களும், சத்துக்களும் இருப்பது உறுதிபடுத்தப் பட்டுள்ளது. அதைத் தொடர்ந்தே விற்பனையைத் தொடங்கி யிருக்கிறோம். சென்னையில் தினமும் உருவாகும் 5 ஆயிரம் டன் குப்பைகளை சேகரிக்கவும், கொடுங்கையூர், பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லவும் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
குப்பைகளைக் தொடர்ந்து கொட்டுவதால், அடுத்த சில ஆண்டுகளில் குப்பைகளைக் கொட்டவே இடம் இல்லாத நிலை ஏற்படும். அதனால் குப்பை உருவாகும் இடத்தி லேயே வகை பிரித்து பெற்று, மறுசுழற்சி முறையில், மறு பயன்பாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். எனவே சமையல் கழிவுகளான மக்கும் குப்பைகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, மாநகராட்சி மயானங் கள், பூங்காக்களில் இயற்கை உரத்தை தயாரித்து வருகிறோம்.
சமையல் கழிவுகள், உரமாக மாற 45 நாட்கள் ஆகின்றன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை தற்போது விற்பனைக்கு கொண்டு வந்தி ருக்கிறோம். இந்தத் திட்டம் மாநகரம் முழுவதும் செயல் பாட்டுக்கு வரும்போது, குப்பைக் கிடங்குகளுக்கு செல்லும் குப்பைகளின் அளவு 25 சதவீதம் குறைவதோடு, நிதி நெருக்கடியில் இருக்கும் மாநகராட்சிக்கு கணிசமான செலவு மிச்சமாகும். இயற்கை உரம் விற்பனையால் வருவாயும் அதிகரிக்கும். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT