Published : 10 Feb 2023 06:58 AM
Last Updated : 10 Feb 2023 06:58 AM
சென்னை: நிதி நிலைமைக்கு ஏற்ப அந்தந்த ஒன்றியங்களே பால் விலையை உயர்த்திக்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஆவின் பால் விலையையும் அந்தந்த ஒன்றியங்களே உயர்த்திக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை திமுக அரசு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவின் பால் உற்பத்தி விலையைக் குறைக்கும் வகையிலும்,ஆவின் மொத்த விற்பனையாளருக்கான திருத்தப்பட்ட தரகுத் தொகையை ஈடுசெய்யும் வகையிலும், பச்சை வண்ண உறை கொண்ட பாலின் கொழுப்புச் சத்தை 4.5 சதவீதத்தில் இருந்து, 3.5 சதவீதமாக குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், திருநெல்வேலி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம், அங்கீகரிக்கப்பட்ட மொத்தவிற்பனையாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், இனி ஒருலிட்டர் பால் விலையில் 40 பைசாஉயர்த்தப்படும்.
இதை சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யும்போது, மொத்த விற்பனையாளர்கள் லிட்டருக்கு மொத்தமாக ரூ.1 உயர்த்துவார்கள். சில்லறை விற்பனையாளர்கள் மக்களுக்கு மேலும் ரூ.1 கூடுதல் தொகைக்கு விற்பனை செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஒரு லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு மக்கள் கூடுதலாக ரூ.2 செலுத்த நேரிடும். ஏற்கெனவே பால் கவரில்அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விற்பனை விலையை சில்லறை விற்பனையாளர்கள் பின்பற்றவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.
எனவே, தற்போதைய விலை மாற்றம் விதிமீறல்களுக்கு வழிவகுக்கும். எனவே, முதல்வர்ஸ்டாலின் இதில் உடனடியாகதனிக் கவனம் செலுத்தி, கொழுப்புச் சத்தை குறைப்பது, விலையைஉயர்த்துவது, நிதிநிலைமைக்கேற்ப அந்தந்த ஒன்றியங்களே பால் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது ஆகியவற்றை ரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...