Published : 04 May 2017 10:01 AM
Last Updated : 04 May 2017 10:01 AM

மத்திய அரசு ஒற்றைத் தீர்ப்பாயம் அமைத்தால் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு காலாவதியாகும் ஆபத்து

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண் டும் என தமிழகம் போராடுகிறது. ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறு திருத்தச் சட்டம் 2017 மசோதா சட்ட வடிவமானால் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பே காலாவதியாகிவிடும் என்று அச்சம் தெரிவிக்கிறது காவிரி உரிமை மீட்புக் குழு.

8 தீர்ப்பாயங்கள்

மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறு சட்டம் 1956-ன் படி இந்தியாவில் இதுவரை எட்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இதில் கிருஷ்ணா, கோதா வரி, நர்மதை ஆறுகள் தொடர் பாக அமைக்கப்பட்ட மூன்று தீர்ப் பாயங்கள் தவிர காவிரி உள்ளிட்ட மற்ற ஐந்து தீர்ப்பாயங்களும் செயலற்ற நிலையில் உள்ளன. அண்மையில் பாராளுமன்றத்தில், மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறு திருத்தச் சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, ‘‘காவிரி மற்றும் ராவி, பியாஸ் நதிகள் தொடர்பாக அமைக்கப்பட்ட தீர்ப் பாயங்கள் பயனற்றுப் போய் விட்டன. அதனால் அவற்றை எல்லாம் கலைக்கலாம்’’ என்றார்.

மத்திய அரசின் புதிய சட்ட திருத்தத்தின் படி, இந்தியா முழு மைக்கும் தண்ணீர் தகராறுகளைத் தீர்த்து வைக்க ஒரே ஒரு பொதுவான தீர்ப்பாயம்தான் இருக்கும். இந்த ஒற்றைத் தீர்ப்பாயத்தில் பிரச்சி னையை பேசித் தீர்க்க ஒரு கமிட்டி இருக்கும்.

தண்ணீர் தகராறுகள் ஏற்படும்போது சம்பந்தப்பட்ட மாநிலங்களோடு இந்தக் கமிட்டி அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத் தும். அதில் சமரசம் ஏற்படாவிட்டால் விவகாரம் தீர்ப்பாயத்துக்கு போகும். அங்கே அதிகபட்சம் மூன்றரை ஆண்டுகளுக்குள் பிரச்சி னையை விசாரித்து தீர்ப்புச் சொல் லப்படும்.

ஆக, ஒரு பிரச்சினைக்கு தீர்வு எழுத அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை எடுத்துக்கொள் ளப்படும். என்றாலும் அந்தத் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இந்த நிலையில், ‘‘மத்திய அரசின் ஒற்றைத் தீர்ப்பாய மசோதா சட்டமானால், காவிரித் தீர்ப்பாயம் உள்ளிட்ட இந்தியாவில் தண்ணீர் தாவாவுக்காக அமைக்கப்பட்ட அனைத்துத் தீர்ப்பாயங்களும் கலைக்கப்படும். அதன்படி,1990-ல் தமிழகம் போராடிப் பெற்ற, காவிரி தீர்ப்பாயமும் கலைக்கப்படும். அப்படிக் கலைக்கப்பட்டால் நமது உரிமையை நிலை நாட்டிய காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் செல்லாத தாகிவிடும்’’ என்கிறார் காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங் கிணைப்பாளர் பெ.மணியரசன்.

நீதிமன்றம் கேட்காதது ஏன்?

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், ‘‘ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே கர்நாடக அரசு மதிக்க மறுக்கிறது. தமிழக அரசு மாநில மக்கள் மீது அக்கறை இல்லாத சுயலாப அரசாக இருப்பதால், மத்திய அரசு கர்நாடகத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளை அங்கீகரித்து ஊக்கப்படுத்துகிறது. இன்னும் ஒரு மாதத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என கடந்த 20-09-2016-ல் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

இதை எதிர்த்து, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது; பாராளுமன்றம்தான் முடிவு செய்யவேண்டும்’ என மத்திய அரசு மனு தாக்கல் செய் தது. இறுதியில், தங்களுக்கு அதி காரம் இருப்பதாக 09-12-2016-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படிச் சொன்னவர்கள், இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்காதது குறித்து ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை.

இந்த வழக்கை விசாரித்த அதே நீதிபதிதான் தமிழக விவசாயி கள் தற்கொலைகள் வழக்கை யும் விசாரித்தார். அந்த விசார ணையின்போது, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கத் தவறியதாலும் அதை உச்ச நீதிமன்றம் தட்டிக் கேட்கத் தவறியதாலும் தமிழகத் துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் வந்து சேரவில்லை. அத னால்தான் விவசாயிகள் தற் கொலை செய்துகொண்டிருக் கிறார்கள்’ என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்.

அப்படிச் செய்யாமல், ‘வறட்சி யால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. குடும்பப் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். குடும்பப் பிரச்சினையால் செத்தவர் களுக்கு ஏன் அரசு நிவாரணம் கொடுத்தார்கள்? இப்படி தொடர்ந்து தமிழகத்துக்கு எதிரான காரியங் கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்தான் காவிரி தீர்ப்பா யத்தை கலைத்து, அது நமக்கு வழங்கிய நியாய தீர்ப்பையும் காலாவதியாக்க மத்திய அரசு முயல்கிறது.

எனவே, காவிரி தீர்ப்பை கட்டுப்படுத்தாத வகையில் ஒற்றைத் தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும். காவிரி தீர்ப்பை அமல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும். மீன்பிடி தடை காலத்தில் மீனவர் களுக்கு வழங்கப்படுவது போல் வறட்சி காலங்களில் விவசாயி களுக்கும் உதவித் தொகை வழங்கு வதுடன், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தி ருக்கிறோம்’’ என்றார்.

ரயில் மறியல் போராட்டம்

இந்தக் கோரிக்கைகளை வலி யுறுத்தி மே 15-லிருந்து ஒருவார காலம் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் தொடர் ரயில் மறியல் போராட் டங்களை நடத்துகிறது காவிரி உரிமை மீட்புக் குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x