Published : 21 May 2017 10:23 AM
Last Updated : 21 May 2017 10:23 AM
அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கணக்கெடுக் கும் பணி தொடங்கியுள்ளது.
அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் விவகாரம் தொடர்பான வழக்கு, தற்போது சென்னை உயர் நீதிமன் றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவில் வரவுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அங்கீகார மற்ற வீட்டு மனைகளை வரன் முறைப்படுத்த, தமிழக அரசு தயா ராகி வருகிறது. அதன் ஒரு பகுதி யாக தமிழகம் முழுவதும் அங்கீகார மற்ற மனைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
உள்ளாட்சி பகுதிகளில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு, அங்கீகரிக்கப் படாத மனைகளை வாங்கியோர் அதை வரன்முறைப்படுத்த, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை புதிய விதிகளை வெளி யிட்டுள்ளது. எனவே, அங்கீகரிக்கப் படாத மனைகளை வாங்கியோர், மனை பிரிவை உருவாக்கியோர், உடனடியாக சம்பந்தப்பட்ட உள் ளாட்சி அமைப்புகளின் அலுவல கத்தில் உரிய முறையில் விண்ணப் பித்து பயன்பெறலாம் என உள் ளாட்சி அமைப்புகள் சார்பில் அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அங்கீகரிக்கப் படாத மனைகள் கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக நகரமைப்பு அலுவலர் ஒருவர், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழ்நாடு நகரமைப்புத் திட்ட மிடல் சட்டம் 1971-ன் கீழ், தமிழ்நாடு அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் ஒழுங்குமுறை விதி - 2017 புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. நிலங்கள் கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன் உருவாக்கப்பட்டவையாக இருந்தால், வரன்முறைப்படுத்தும் விதியின்கீழ் கொண்டுவர முடியும். இந்த மனைகளை பதிவு செய்வதன் மூலம் நிலம் வாங்கியவர்கள், பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறலாம். மின் இணைப்பும் பெற்றுக் கொள்ளலாம். உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறும் பட்சத்தில், வங்கியில் வீடு கட்ட கடனும் கிடைக்கும்.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் இடத்தின் வரைபட நகலை நிலம் அமைந்துள்ள பகுதியின் உள் ளாட்சி அமைப்பு அலுவலகத்தில் 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். மேலும் உள்ளாட்சி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் நிலங்கள், மனைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதியில் உள்ள அரசு உரிமம் பெற்ற சர்வேயர், ஆர்கிடெக், கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர்கள் ஆகியோர் கணக்கெடுப்புப் பணியை செய்யவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்தப் பணியில் ஈடு படுபவர்களுக்கு, அரசு சேவை கட் டணம் வழங்க உத்தேசித் துள்ளது.
கணக்கெடுப்புப் பணிகளை 20 நாட்களுக்குள் முடித்து அரசுக்கு அறிக்கை வழங்கப்படும். அதன்பிறகு சம்பந்தப்பட்ட இடங் களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் உள் ளாட்சி நகர்ப்புற வளர்ச்சி துறையை சேர்ந்த வல்லுநர்கள் ஆய்வு செய்து அனுமதி வழங்குவர். இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள், வீடு, நிலம் விற்போர் பயன்படுத்தி, மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT