Published : 10 May 2017 12:56 PM
Last Updated : 10 May 2017 12:56 PM
நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடந்தது. தேர்வு எழுதவந்த மாணவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கேரளாவில் மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக வழக்கறிஞர் நசருல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை கால அமர்வு முன் முறையீடு செய்தார்.
"நீட் தேர்வு எழுதவந்த மாணவ மாணவிகளை ஆபரணங்களை அகற்றச் சொல்லியும், முழுக்கைச் சட்டை ஆடைகளை கிழிக்கச் சொல்லியும், சுடிதார் துப்பட்டாவை அகற்றச் சொல்லியும் கண்காணிப்பாளர்கள் அத்துமீறியுள்ளனர். இது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இப்பிரச்சினையை நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்காக விசாரிக்க வேண்டும்" எனக் கூறினார்.
விடுமுறைக் கால அமர்வு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், சுப்பிரமணியம் ஆகியோர் நசருல்லாவின் முறையீடு தொடர்பாக பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT