Published : 30 Jan 2014 12:00 AM
Last Updated : 30 Jan 2014 12:00 AM
காங்கிரஸையும் அழைத்துக் கொண்டுவந்தால் திமுக கூட்டணி பற்றிப் பேசுவதாக, மலேசியாவுக்கு தூதுபோன மமக நிர்வாகிகளிடம் சொன்ன விஜயகாந்த் இப்போது மாற்றி யோசிப்பதாகச் சொல்கிறார்கள். பாஜக-வுடன் இணைந்த திமுக கூட்டணியில் இணைந்தால் என்ன என்பதுதான் இப்போது அவரது திட்டம் என்கிறார்கள்.
இதுகுறித்து தேமுதிக முக்கிய நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: “இன்றைய சூழலில் தேர்தல் அரசியலே எங்களைச் சுத்தித்தான் நடக்கிறது. மற்ற கட்சிகளைவிட நாங்கள் யாரோடு கூட்டணி சேரப் போகிறோம் என்பதை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த தேர்தல் களில் பாஜக., மதிமுக தலா 2 சதவீதமும், பாமக 3.5 சதவீதமும் ஓட்டு பெற்றன. ஆனால், நாங்கள் 10 சதவீதம் பெற்றோம். இப்போது நாங்கள் பாஜக கூட்டணிக்கு சென்றாலும் அக்கூட்டணி மொத்தமே 17.5 சதவீதமே ஓட்டுக்கள் மட் டுமே பெற முடியும். மோடி அலைக்கு 5 சதவீதம் என்று வைத்துக் கொண்டாலும் மொத்த ஓட்டுக்கள் 22.5 சதவீதத்தைத் தாண்டாது.
ஆனால், திமுக மட்டுமே 27 சதவீதம் ஓட்டு வங்கி வைத்துள்ளது. மதிமுக, பாமக ஆகிய கட்சிகளை பலவீனப்படுத்தித்தான், தேமுதிக தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. அந்தக் கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணி யில் சேர்ந்து எங்கள் ஓட்டுக்கள் மூலம் மீண்டும் அவர்களை வளர்த்துவிட்டு நாங்கள் பலவீனம் அடைய வேண்டுமா என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.
இதை எல்லாம் அறியாதவர் அல்ல விஜயகாந்த். வேண்டு மானால் தேமுதிக, திமுக கூட்டணிக்கு பாஜக-வும் வரட்டும். கட்சிக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் சிலர் இந்தக் கூட்டணியை அமைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் பாஜக-வின் மேலிடத்துக்கு, இதுகுறித்த தகவல்களை அனுப்பி
விட்டனர். அங்கிருந்து பரிசீலிக்கி றோம்; காத்திருங்கள் என்று தகவல் வந்திருக்கிறது. திமுக தரப்பும் ‘நரேந்திர மோடி அல்லது ராஜ்நாத் சிங் திமுக தலைவர் கருணாநிதியிடம் நேரடியாக பேசினால் முடிவு செய்யலாம்’ என்று விரும்புகிறது.
அதேசமயம், சிலரது விருப்பத்துக்காக நாங்கள் உடனடியாக கூட்டணியை முடிவு செய்ய முடியாது. அதிமுக, பாமக எல்லாம் என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை எல்லாம் நாங்கள் பார்க்க வேண்டும். அதன் பின்புதான் கூட்டணியை முடிவு செய் வோம். திமுக தரப்பிலிருந்து எங்களோடு தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆனால், 8 தொகுதிக்கு மேல் பேச மறுப்பதால் பொறுத்திருக்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT