Published : 06 Feb 2023 06:12 AM
Last Updated : 06 Feb 2023 06:12 AM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் 18சாலைகளை பிப். 11-ம் தேதி முதல் குப்பை இல்லாத சாலைகளாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 டன் திடக்கழிவு சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மூலம் வீடுகளுக்குச்சென்று மக்கும், மக்காத குப்பைபிரித்து பெறப்படுகிறது. மேலும்,மாநகராட்சி சார்பில் முக்கியப் பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு, சேகரமாகும் குப்பை லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.
மேலும் கடைகள், வணிக வளாகங்களில் மக்கும், மக்காத குப்பையாகப் பிரித்து சேகரிக்க வசதியாக,பச்சை மற்றும் நீல நிறத்தில் குப்பைத் தொட்டிகளை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திடக்கழிவு மேலாண்மையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மாநகராட்சி சார்பில் குப்பையில்லா பகுதிகள் என்ற திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய குப்பைத் தொட்டிகள் அமைத்தல், சிறிய குப்பைத்தொட்டியுடன் கூடிய மிதிவண்டிகளில் தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறைரோந்துப் பணியில் ஈடுபடுதல், சாலைகளில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதித்தல் போன்றநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த 18 சாலைகளை குப்பையில்லா பகுதிகளாக அறிவிப்பதன் மூலம், 74.3 கி.மீ. நீள சாலைகள், அப்பகுதிகளில் உள்ள 196 பேருந்துநிறுத்தங்கள் ஆகியவை தூய்மையுடன் பராமரிக்கப்பட உள்ளன. இதற்காக அங்கு 442 சிறிய குப்பைத்தொட்டிகள் அமைக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மணலி மண்டலம் காமராஜர் சாலை, மாதவரம்மண்டலம் ஜிஎன்டி சாலை, அம்பத்தூர் மண்டலம் செங்குன்றம் சாலை,தண்டையார்பேட்டை மண்டலம் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ராயபுரம் மண்டலம் பூந்தமல்லி நெடுஞ்சாலை, திரு.வி.க.நகர் மண்டலம் பெரம்பூர் நெடுஞ்சாலை, அண்ணா நகர் மண்டலம் பூந்தமல்லி நெடுஞ்சாலை, தேனாம்பேட்டை மண்டலம் கத்தீட்ரல் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம் மண்டலம்தியாகராயா சாலை, பூந்தமல்லிநெடுஞ்சாலை, வளசரவாக்கம்மண்டலம் பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆலந்தூர் மண்டலம் ஜிஎஸ்டி சாலை, அடையாறு மண்டலம் எலியட்ஸ் கடற்கரை சாலை, பெருங்குடி மண்டலம், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ளராஜீவ் காந்தி சாலை ஆகியவைதூய்மையாகப் பராமரிக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT