Published : 04 Feb 2023 06:21 AM
Last Updated : 04 Feb 2023 06:21 AM

செனாய் நகர் அம்மா அரங்கத்தில் பொது நிகழ்ச்சிகளை நடத்த மாநகராட்சி அனுமதி: ஒருநாள் வாடகை ரூ.2,28,440

சென்னை: செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பொது நிகழ்ச்சிகளை நடத்த சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு வழங்கி அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலம் செனாய் நகர், 8-வது குறுக்கு தெருவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அம்மா அரங்கம், பொதுமக்களின் நலன் கருதி தற்போது அனைத்து குடும்ப சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், கண்காட்சி, பள்ளி மற்றும் கல்லூரிகள் நடத்தும் உள்விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, பாராட்டு விழாக்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் மன்றத்தின் அனுமதி பெறப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேற்படி, அம்மா அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடத்த நாள் ஒன்றுக்கான வாடகை ரூ.2,28,440 ஆகவும்,அரை நாள் வாடகை ரூ.1,14,220 ஆகவும் (ஜிஎஸ்டி, மின் கட்டணம் மற்றும் தூய்மைக் கட்டணம் நீங்கலாக) நிர்ணயிக்கப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், முகூர்த்த தினங்கள் தவிர இதர நாட்களில் வணிக நோக்கத்துடன் செயல்படும் நிகழ்ச்சிகளான புத்தகக்கண்காட்சி, மகளிர் சுயதொழில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, தனியார் நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x