Published : 28 May 2017 10:37 AM
Last Updated : 28 May 2017 10:37 AM
பிரதமர் மோடி தேசிய தலைவர் மட்டுமல்ல, உலக அளவில் போற் றப்படும் தலைவராக உள்ளார் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நாமக் கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நெய்வேலியில் இருந்து திரு வாரூர் மாவட்டத்துக்கு மின்சாரம் கொண்டுசெல்லும் உயர் அழுத்த மின்பாதையில் விருத்தாசலம் அருகில் காற்றின் வேகம் காரண மாக மின் கோபுரம் சேதமடைந் தது. இதனால் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதி, பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை முதல் மின்தடை ஏற்பட் டுள்ளது.
டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை மக்கள் விரும்பாத எந்த இடத்திலும் அரசு மதுக்கடை திறக்கப்போவதில்லை. தேர்தல் நேரத்தில் அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும். வேலை இழந்துள்ள டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி தேசிய தலைவர் மட்டுமல்ல. உலக அளவில் போற் றப்படும் தலைவராக இருக்கிறார். அவர் குறித்து சிலர் தரக்குறை வாக பேசுவது அரசியல் முதிர்ச்சி யின்மையைத்தான் காட்டுகிறது.
பாமக என்ற கட்சியை தமிழகத் துக்கு அடையாளம் காட்டியதும், அந்த கட்சிக்கு அங்கீகாரம் ஏற்படுத் திக் கொடுத்ததும் ஜெயலலிதா தான். ஜெயலலிதா படத்தை சட்டப்பேரவையில் வைக்கக் கூடாது என ராமதாஸ் கூறுகிறார். உலக அளவில் போற்றப்படும் தலைவராக ஜெயலலிதா உள் ளார். உயிரைக் கொடுத்தாவது சட்டப்பேரவையில் அவரது படத் தைத் திறப்போம். சட்ட நடை முறையில் எந்த பாதிப்பும் இல்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT