Published : 06 Jul 2014 09:00 AM
Last Updated : 06 Jul 2014 09:00 AM

தமிழக அதிகாரிகள் பெரியாறு அணையில் ஆய்வு: மூவர் குழு வருகையையொட்டி நடத்தினர்

பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து கண்காணிக்க 3 பேர் கொண்ட குழு வர உள்ளது. இதனால் முன்னதாக தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் பெரியாறு அணையில் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. மேலும் அணையின் பாதுகாப்பு மற்றும் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து கண்காணிக்க தமிழகம், கேரளம், மத்திய அரசு சார்பில் 3 பேர் கொண்ட ஆய்வுக்குழுவை அமைக்கும்படி கோரப்பட்டது.

இதனையடுத்து தமிழகம், கேரளம் மற்றும் மத்திய அரசு சார்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஜூலை 12-ம் தேதி முல்லை பெரியாறு அணையை பார்வையிட வரலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை தமிழக பொதுப் பணித் துறை இயக்கம் மற்றும் பராமரிப்பு முதன்மைப் பொறியாளர் ஜான்பிரிட்டோ தலைமையில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் முல்லை பெரியாறு அணைக்கு வந்தனர்.

ஷட்டர் பகுதி, அணையின் உள்பக்கம், பேபி டேம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் இரண்டாம்கட்ட பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். ஆய்வின்போது மதுரை மண்டல முதன்மை பொறியாளர் தமிழரசு, அணையின் செயற்பொறியாளர் மாதவன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x