Last Updated : 31 Jan, 2023 11:27 AM

 

Published : 31 Jan 2023 11:27 AM
Last Updated : 31 Jan 2023 11:27 AM

நாமக்கல்லில் தேசிய கீதம் பாடியபோது செல்போன் பேசிய போலீஸ் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா | கோப்புப்படம்

நாமக்கல்: நாமக்கல் அருகே நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ,தேசிய கீதம் பாடப்பட்டபோது மரியாதை செலுத்தாமல் செல்போன் பேசிக்கொண்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டைமேட்டில் கடந்த 28ஆம் தேதி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழா நடைபெற்ற இடத்திலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டிருந்தனர். விழாவின் நிறைவில் தேசிய கீதம் பாடப்பட்டது.

அப்போது விழா நடந்த இடத்தின் கடைசி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் இருக்கையில் அமர்ந்து கொண்டு செல் போன் பேசி கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.

இதனை அடுத்து தேசிய கீதம் பாடப்பட்டபோது மரியாதை செலுத்தாத சிறப்பு உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் இன்று (ஜன.31) உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x