Published : 12 May 2017 08:15 AM
Last Updated : 12 May 2017 08:15 AM
மன அமைதிக்காக கொடைக் கானலில் தங்கி தியான வகுப்புக் குச் செல்லும் மணிப்பூர் போராளி இரோம் ஷர்மிளா, தான் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகினாலும், புரட்சியாளராக தொடர்வேன் என தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரைச் சேர்ந்தவர் இரோம் ஷர் மிளா. இவர், அந்த மாநிலத்தில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதி கார சட்டத்தை எதிர்த்து தனது இளம் வயது முதல் தனி ஆளாக நின்று பல ஆண்டுகள் போராடி னார். தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்ட இவர், வெகுநாட் களை சிறையில் கழித்தார்.
தனது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காத நிலையில், சமீபத் தில் நடைபெற்ற மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தலில் தனியாக கட்சியைத் தொடங்கி போட்டி யிட்டார். இதில் இவர், 90 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதனால், அரசியலில் இருந்து விலகினார். போராட்டத்தில் தோல்வி, அரசியல் வாழ்க்கையில் தோல்வி என தொடர் தோல்வியால் துவண்ட இரோம் ஷர்மிளா மன அமைதி பெற இவரது நண்பர்கள் கொடைக்கானலுக்கு அழைத்து வந்துள்ளனர்.
கொடைக்கானல் அருகே பெரு மாள் மலை கிராமத்துக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி யுள்ளார். அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு இவரை அடையாளம் தெரியாததால் வழக்கம்போல் இப்பகுதிக்கு வந்து செல்லும் ஒரு சுற்றுலாப் பயணியாகவே இரோம் ஷர்மிளாவை பார்த்துள்ளனர். இதனால் பொது இடங்களில்கூட இவர் சாதாரணமாக சென்று வந்துள்ளார்.
பெருமாள் மலை அருகே உப்புப்பாறை பகுதியில் உள்ள ‘போதிஜென்டா’ என்ற தியான நிலையத்துக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சென்று வருகிறார். இந்த தியான நிலையத்துக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் மன அமைதிக் காக தியானம் செய்ய வந்து செல்கின்றனர்.
கடந்த 20 நாட்களாக பல்வேறு இடங்களுக்கு சாதாரணமாக நடந்து சென்று வந்துள்ளார். தற்போது இவரைப் பற்றி அறிந்த பலர் இரோம் ஷர்மிளாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். பிரபல நபர் என்று தெரிந்துவிட்டதால் தற்போது தியான நிலையத்துக்கு மட்டும் சென்று வருகிறார். மற்ற நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தவிர்க்கிறார்.
இவருக்கு மணிப்பூர் மொழி மட்டுமே தெரிகிறது என்பதால் உடன் இவரது நண்பர் தேஸ் மந்த்கொட்டின்கோ உதவி வருகி றார். இரோம் ஷர்மிளா கூறிய தாவது: அமைதியாக வாழ ஏற்ற இடமாக கொடைக்கானல் மலைப் பகுதி உள்ளதால் இந்த இடம் மிகவும் பிடித்துள்ளது. அரசியலை விட்டு விலகினாலும், நான் ஒரு லட்சியப் போராளி, தொடர்ந்து புரட்சியாளராகத்தான் இருப் பேன். விரைவில் திருமணம் செய்துகொள்வேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT