Published : 27 Jul 2014 12:36 PM
Last Updated : 27 Jul 2014 12:36 PM

மின்னணு வாக்கு இயந்திர முறைகேட்டை சிபிஐ விசாரிக்கக் கோரி வழக்கு: பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் நடந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேட்டை சிபிஐ விசாரிக்கக் கோரி வழக்கு தொடரப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

ஓய்வுக்காக தனது குடும்பத்தினருடன் உதகை வந்த ராமதாஸ் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:

தமிழகத்தில் 2016-ல் அரசியல் மாற்றம் ஏற்படும். 47 ஆண்டு காலம் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் ஆட்சி செய்து தமிழகத்தை சீரழித்துவிட்டன. இளைஞர்களை குடிகாரர்களாக மாற்றிவிட்டன. இந்த நிலை மாற வேண்டும். இதற்கான எண்ணம் ஆற்றல் மற்றும் மக்கள் சக்தி பாமக-வுக்கு மட்டுமே உள்ளது.

பாமக ஆட்சிக்கு வந்தால் தரமான, இலவச மற்றும் கட்டாயக் கல்வி, விவசாயத்துக்கு முன்னுரிமை, தரமான சுகாதாரம் ஆகிய மூன்று பிரச்சினைகளுக்கும் முன்னுரிமை அளிக்கும். பூரண மதுவிலக்கும் அமல்படுத்தப்படும்.

தமிழகத்தில் மது விற்பனையை நிறுத்தி, ஏராளமான இயற்கை வளங்கள் மூலம் வருவாய் பெறலாம். வணிகவரி முறையாக வசூலித்தாலே மது விற்பனை செய்யத் தேவையில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக யாருடனும் கூட்டணி இல்லை எனக் கூறி தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை யுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது. தமிழகத்தில் மின்வெட்டு, நில அபகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, விவசாயம் பாதிப்பு என பல பிரச்சினைகளால் மக்கள் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருந்தனர். இருப்பினும் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற தற்கு காரணம் மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்தது தான்.

தேர்தலுக்குப் பயன்படுத் தப்பட்ட மின்னணு வாக்கு இயந்தி ரங்களில் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும், வாக்குச் சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் வழக்குத் தொடரவுள்ளோம்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித் தாடுகிறது. இதை தடுக்க அரசியல் மாற்றம்தான் ஒரே தீர்வு.

மேட்டுபாளையம் வனக் கல்லூரி மாணவர்களுக்கு வனச்சரகர் பதவி வழங்கப்படுவது இல்லை. நியமனத்தில் 25 சதவீதம் இக்கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படாததைக் கண்டித்து மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடுகுறித்த கேள்விக்கு நீதித்துறையில் அரசியல் தலையீடு உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x