Published : 29 Jan 2023 04:06 PM Last Updated : 29 Jan 2023 04:06 PM
பாலம் கட்டும் பணி காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னை: பாலம் கட்டுமான பணி காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை 2-வது தெருவில் ஆஸ்பிரின் கார்டன் முதல் தெரு சந்திப்பு அருகில் உள்ள பழைய பாலம் இடிக்கப்பட்டு சென்னை மாநகராட்சி சார்பில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்க உள்ளது. இதன் காரணமாக நாளை (ஜன. 30 ) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன் விவரம்:
கீழ்ப்பாக்கம் கார்டன் இரண்டாவது சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
நியு ஆவடி சாலையிலிருந்து கீழ்ப்பாக்கம் 2-வது தெரு வழியாக கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை நோக்கி செல்லக் கூடிய வாகனங்கள், ஆஸ்பிரின் கார்டன் 1-வது தெரு சந்திப்பில் நேராக நியு ஆவடி சாலை வழியாக செல்லலாம். (ஆஸ்பிரின் கார்டன் 1-வது தெருவை நோக்கி இடது புறம் திரும்ப அனுமதியில்லை.)
கீழ்பாக்கம் கார்டன் சாலையிலிருந்து கீழ்ப்பாக்கம் 2-வது தெரு வழியாக ஆஸ்பிரின் கார்டன் நோக்கி செல்ல கூடிய வாகனங்கள், கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை டெய்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து நேரடியாக கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, நியு ஆவடி சாலை மற்றும் ஆஸ்பிரின் கார்டன் முதல் தெரு வழியாக செல்லலாம்.
WRITE A COMMENT