Published : 29 Jan 2023 12:47 PM
Last Updated : 29 Jan 2023 12:47 PM

பறவைகள் கணக்கெடுப்பு | பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தென்பட்ட 14 ஆயிரம் அடி உயரம் பறக்கும் வரித்தலை வாத்து

வரித்தலை வாத்து | கோப்புப் படம்

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பின் போது 14 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் வரித்தலை வாத்து தென்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி 2022-2023ம் வருடத்திற்கான பறவைகள் கணக்கெடுப்பானது நீர் பறவைகள் மற்றும் நிலப் பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. நீர் பறவைகளின் கணக்கெடுப்பானது ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும், நிலப் பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் 4 மற்றும் 5 தேதிகளிலும் நடைபெறுகிறது.

இதன்படி சென்னையில் நீர் பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பறவை ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கரணை வனச் சரகத்திற்குட்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 9 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பின்போது, 14 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் வரித்தலை வாத்து தென்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய ஆசியாவை இருப்பிடமாகக் கொண்ட வரித்தலை வாத்துகள், அதிக உயரத்தில் பறக்கும் பறவைகளில் ஒன்றாகும். 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் அடி வரை உயரத்தில் பறக்கக்கூடியவை இவை. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வரித்தலை வாத்து தென்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x