Published : 05 Dec 2016 10:23 AM
Last Updated : 05 Dec 2016 10:23 AM
பூச்சிக் கொல்லி மருந்தால் ஆரோக் கியம் கெடுவதைத் தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் விவசாயி களுக்கு, ரூ.5 கோடி மதிப்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி மற்றும் பயிற்சி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய வேளாண்மை அபிவிருத் தித் திட்டத்தின் மூலம் பூச்சி தாக்கு தலைக் கட்டுப்படுத்தவும், அதன் இனப்பெருக்கத்தைத் தடுக்கவும் இனக் கவர்ச்சிப் பொறி, விளக்குப் பொறி, வண்ண பசை அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென ரூ.4.42 கோடியும், மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க ரூ.58 லட்சமும் என மொத்தம் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 43 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பழ மரங்கள், பூ வகைகள், காய்கறி தோட்டங்களில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். முதல்கட்டமாக 8,500 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள காய்கறி, பழத் தோட்டங்களுக்கு இனக்கவர்ச்சிப் பொறி, விளக்குப் பொறி, வண்ண பசை அட்டைப் பொறி வழங்கப்பட உள்ளன.
பயிர்களை அதிக அளவு தாக் கும் காய்ப்புழு, வெள்ளை ஈ, மாவு பூச்சி, அசுவுனி, கூட்டுப் புழு, நீலிபெக் உள்ளிட்டவையால் பயிர் சாகுபடி பாதிப்படைகிறது. இதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன் படுத்துவதால், மனித உடல் ஆரோக்கி யம் கெடுகிறது. இந்த இனக்கவர்ச் சிப் பொறியை விவசாயத் தோட்டத் தில் வைக்கும்போது, துளையிடப் பட்ட பாட்டிலில் உள்ள பெண் பூச்சி களின் திரவத்தினால் ஈர்க்கப்படும் ஆண் பூச்சிகள் பொறியில் சிக்கி மடியும். பயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இப்பூச்சிகளின் இனப்பெருக்கம் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும்.
விளக்குப் பொறியை தோட்டத்தில் வைக்கும்போது, ஒளியை நோக்கி வரும் பூச்சிகள், நெருப்பில் விழுந்து மடியும். மஞ்சள் நிற வண்ணப் பசை அட்டை பொறியில் பூச்சிகள் வந்து அமர்ந்ததும், ஒட்டிக்கொள்ளும். இதன் மூலம் பயிர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத் தும் பூச்சிகள் ஒட்டுமொத்தமாக அழியும். ரசாயன கலப்பில்லாத ஆரோக்கிய காய்கறி, பழ வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்ய, இது ஏதுவாக அமை யும்.
இதுகுறித்து சேலம் தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் பிரபு கூறும்போது: “தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பயிர் பாது காப்பை உறுதி செய்யவும், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தா மல் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் ஆரோக்கியமான பழங்களையும், காய்கறிகளையும் பொதுமக்கள் பயன் படுத்த வழி பிறக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT