Published : 28 Jan 2023 06:08 AM
Last Updated : 28 Jan 2023 06:08 AM
கோவை: கோவை மாநகரில் வரித்தொகை செலுத்த இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரை நிதியாண்டு வரையிலான காலத்தில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக பின்வரும் வார்டு பகுதிகளில் இன்று (ஜன.28), நாளை (ஜன.29) ஆகிய 2 நாட்கள் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
அதன்படி, மாநகராட்சிக்கு கிழக்கு மண்டலத்தில் 56,57-வது வார்டுக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர், 7-வது வார்டு நேரு நகர் மாநகராட்சிப் பள்ளி, மேற்கு மண்டலத்தில் 34-வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம், மஞ்சீஸ்வரி காலனி கற்பக விநாயகர் கோயில் வளாகம், 38-வது வார்டு வடவள்ளி பாலாஜி நகர் புவனேஸ்வரி அம்மன் கோயில் வளாகம் ஆகியவற்றில் இம்முகாம் நடக்கிறது.
தெற்கு மண்டலத்தில் 98-வது வார்டு சாய் நகர், காந்தி நகர், 97-வது வார்டு ஹவுசிங் யூனிட் 2, பிள்ளையார்புரம் பகுதி, வடக்கு மண்டலம் 11-வது வார்டு ஜனதா நகர் மாநகராட்சிப் பள்ளியிலும், 15-வது வார்டு சுப்ரமணியம்பாளையம் மாநகராட்சி வணிக வளாகத்திலும், மத்திய மண்டலத்தில் 32-வது வார்டு ரத்தினபுரி சிறுவர் பூங்கா, 63-வது வார்டு ஒலம்பஸ் 80 அடி சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம், 84-வது வார்டு ஜி.எம்.நகரில் உள்ள தர்க்கத் இஸ்லாம் பள்ளி ஆகியவற்றில் முகாம் நடக்கிறது.
இன்று 40-வது வார்டு வி.என்.ஆர் நகரிலும், நாளை 73-வது வார்டு பொன்னையராஜபுரம் வார்டு அலுவலகம், 40-வது வார்டு பெரியதோட்டம் காலனியில் இம்முகாம் நடக்கிறது. அதுதவிர, மார்ச் 31-ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம்போல காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும். பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தங்களது வரித்தொகையை செலுத்தலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT