Published : 08 Apr 2014 11:11 AM
Last Updated : 08 Apr 2014 11:11 AM

டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுது: நங்கநல்லூரில் 8 மணி நேர மின்தடையால் தூக்கமின்றி தவிக்கும் மக்கள்

நங்கநல்லூர் பகுதியில் டிரான்ஸ் பார்மர் அடிக்கடி பழுதடைவதால் 8 மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகிறது. இதனால் 3 வாரங்களாக இரவில் தூக்கமின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.

கோடைக்காலம் தொடங்கி விட்டதால் வெயில் சுட்டெரிக்கிறது. வீடுகளில் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் மின் உற்பத்தி குறைவாக இருப்பதால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் 5 மணி நேரம் வரை மின்தடை அமல்படுத்தப்படுகிறது. சென்னையில் சில இடங்களில் பராமரிப்பு பணிகளை சரியாக செய்யாததால் டிரான்ஸ்பார் மர்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, அதனாலும் மின் தடை ஏற்படுகிறது. நங்கநல்லூர் 6-வது பிரதானச் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரும் பழுதடைந் துள்ளதால் மின்தடையால் இரவில் மக்கள் தூக்கமின்றி அவதிப்படு கின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதி யைச் சேர்ந்த ரகு என்பவர் கூறியதாவது: அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமாக இந்தப் பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. இங்குள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் அம்பேத்கர் தெரு, நங்கநல்லூர் - உள்ளகரம் இணைப்பு பகுதி உள்பட 6 தெருக்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் மின்சாரம் தடைபடுகிறது.

பகலில் 3 மணி நேரமும் இரவில் 5 மணி நேரமும் மின்தடை ஏற்படுகிறது. கடந்த 3 வாரமாக இரவில் தூக்கமின்றி அவதிப்படுகிறோம். இப்பகுதியில் கூடுதல் திறன் கொண்ட டிரான்ஸ் பார்மரை நிறுவ வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x