Published : 27 Jan 2023 08:31 PM
Last Updated : 27 Jan 2023 08:31 PM
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் வலைதள பக்கத்தை ஹேக் செய்து முடக்கிய ஹேக்கர்கள், காங்கிரஸ் கட்சியுடன் மநீம இணைய உள்ளதாக பதவிட்டுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வலைதளப் பக்கத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள், ஜன.30-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க உள்ளதாக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மநீம ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 27, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment