Published : 27 Jan 2023 07:27 AM
Last Updated : 27 Jan 2023 07:27 AM
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உருவாட்டி கிராமத்தில் மனக்குடி கண்மாயை ஒட்டிய பகுதியில் பெருங்கற்கால முதுமக்கள்தாழிகள், பானை ஓடுகள், இரும்பை உருவாக்கும் கசடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இது குறித்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:
தேவகோட்டை அருகே உருவாட்டி கிராமத்தின் மையப் பகுதியில் ஏராளமான பானை ஓடுகள்காணப்படுகின்றன. இவை பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை. பானைகளை கலைநயத்துடன் வடிவமைத்துள்ளதைப் பார்க்கும்போது இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நாகரிக, பண்பாட்டுடன் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. மேலும் இப்பகுதியில் கண்மாய், குளம் போன்ற நீர்நிலைகள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT