Published : 27 Jan 2023 06:35 AM
Last Updated : 27 Jan 2023 06:35 AM
கரூர்: கரூரில் நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியர் பிரபுசங்கர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.
இதில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முக வடிவேல், மேற்பார்வையாளர்கள் சிவகுமார், ஆறுமுகம், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேருக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக மேற்கொண்டதை பாராட்டி வழங்கப்படுவதாக பாராட்டு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT