Published : 26 Jan 2023 02:09 PM
Last Updated : 26 Jan 2023 02:09 PM
சென்னை: தமிழ்நாட்டிலிருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். அவர்களுக்கும் மற்ற பத்ம விருது பெற்றவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் ஆபத்தான பாம்புகளை கையாள்வதில் நமது பூர்வகுடிகள் கொண்ட அறிவின் களஞ்சியமாக விளங்குபவர்கள். ஏராளமான விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றிய அரிய பாம்பு விஷங்களை சேகரிப்பதிலும் இவர்கள் உதவியுள்ளனர்.
பத்மபூஷண் விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கே. கல்யாணசுந்தரம் பிள்ளை (கலை), பாலம் கல்யாணசுந்தரம் (சமூக சேவை), டாக்டர். கோபால்சாமி வேலுசாமி (மருத்துவம்) ஆகியோருக்கும் ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்." இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். அவர்களுக்கும் மற்ற பத்ம விருது பெற்றவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். (1/2) pic.twitter.com/0g5Avf8GNu
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 25, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT