Published : 18 Dec 2016 10:10 AM
Last Updated : 18 Dec 2016 10:10 AM

திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், நாமக்கல், மதுரை மாவட்டங்களில் இலவச அவசர கால்நடை மருத்துவ ஊர்திகள்: அவசர சிகிச்சைக்கு ‘1962’-ஐ அழைக்கலாம்

கால்நடைகளுக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சை அளிப்பதற்காக திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், நாமக்கல், மதுரை ஆகிய மாவட் டங்களுக்கு தலா 2 இலவச அவசர கால்நடை மருத்துவ ஊர்திகள் வழங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

ஊரகப் பகுதிகளில் இயங்கி வரும் நகரும் கால்நடை மருத்துவ அலகுகள் வழக்கமான கால் நடை மருத்துவ சேவைகளை மட்டுமே விவசாயிகளின் இருப் பிடங்களுக்குச் சென்று வழங்கி வருகின்றன.

உயிர் காக்கும் சிகிச்சை

சில நேரங்களில் கால்நடை களுக்கு அவசர சிகிச்சை தேவைப் படும். அவ்வாறு கால்நடைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிப்ப தற்காக நடமாடும் கால்நடை மருத் துவ ஊர்தி சேவைத் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அறி முகப்படுத்தப்பட்டது. இந்த திட் டத்தை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் சிகிச்சைகள் இயக்கு நரகம் செயல்படுத்தி வருகிறது.

முதல்கட்டமாக தற்போது திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், நாமக்கல், மதுரை ஆகிய மாவட் டங்களுக்கு மொத்தம் ரூ.6.33 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய தலா இரு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

காலை 8 - மாலை 8 மணி வரை

இந்த வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது இந்த வசதியை காலை 8 முதல் இரவு 8 மணி வரை கால்நடை வளர்ப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு ‘1962’ இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

இந்தத் திட்டம் குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் திருச்சியில் செயல்பட்டு வரும் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் பி.என். ரிச்சர்டு ஜெகதீசன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு தேவைப்படும் அவசர உதவிக்கு ‘1962’ என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். மாடுகள் கன்று ஈன இயலாமை, கருப்பை வெளித் தள்ளுதல், விஷ செடிகளை உட்கொண்டதால் ஏற்படும் பிரச் சினை, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் தீண்டியதால் ஏற்படும் பாதிப்புகள், விபத்துகளால் ஏற்படும் காயம் உள்ளிட்டவைகளுக்கு கால்நடைகளின் இருப்பிடத்துக்கே நேரடியாகச் சென்று இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.

உபகரணங்கள், மருந்துகள்

இந்த வாகனத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர், ஜெனரேட்டர், மாடுகளை படுத்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ எடுத் துச் செல்ல வசதியாக ஹைட்ராலிக் லிப்ட் உள்ளிட்ட அவசர கால சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் அனைத்து உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளன.

பாதிக்கப்பட்ட கால்நடை களுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கப்படும். மேல் சிகிச்சை தேவை என மருத்துவர் கருதினால், அந்த கால்நடையை அதே வாகனத் தில் எடுத்துச் சென்று அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த வாகனத்தின் மூலம் தமிழக அரசு வழங்கியுள்ள விலை யில்லா கறவை மாடுகள் மற்றும் வெள்ளாடுகளுக்கு சினைப் பருவ ஒருங்கிணைப்புத் திட்டமும் அந் தந்த மாவட்டங்களில் செயல் படுத்தப்படுகிறது.

இந்த இலவச அவசர சிகிச்சை வாகனத்தை ‘1962’ என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அழைக்கலாம். அவ்வாறு அழைக்கும் போது, தங்களது பெயர், தெளிவான முகவரி, கால்நடைக்கு ஏற்பட்டுள்ள பிரச் சினை ஆகியவை குறித்து முழு மையான தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

அவசர காலத்துக்கு மட்டும்

இந்தத் திட்டம் முழுமையாக அவசர காலத்தில் உதவிடும் வகை யில் செயல்படுவதால், அவசர காலத்துக்கு மட்டுமே கால்நடை வளர்ப்போர் தொடர்பு கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மேலும் 27 மாவட்டங்களுக்கு ரூ.37.88 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப் படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x