Published : 31 Dec 2016 09:18 AM
Last Updated : 31 Dec 2016 09:18 AM

பண மதிப்பு நீக்கத்தால் நிலைகுலைந்த தொழில் துறை: கவலையில் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள்

பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியாகி 50 நாட்களான நிலையில் தொழில் நிறுவனங்களுக்கான ஆர்டர்கள் பெருமளவு குறைந்து, உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.

ரூ.500, ரூ.1000 நோட்டுகளின் பண மதிப்பை நீக்கி நவம்பர் 8-ம் தேதி இரவு மத்திய அரசு உத்தரவிட்டது. வங்கி, ஏடிஎம்-களில் பணம் எடுக்கவும் பல் வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டன. இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாது தொழில் துறையின ரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி, பிஹார், அசாம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஏராளமா னோர் கோவையில் தங்கி பணி புரிகின்றனர். தொழிலாளர்களுக்கு சம்பளம் பெரும்பாலும் ரொக்கமாக வழங்கப்படுகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, சம்பளம் வழங்க முடியாமலும், மூலப் பொருட்கள் வாங்க முடியாமலும், உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளைத் தலைவர் வனிதா மோகன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “கடந்த ஒன்றரை மாதங்களில் தொழில் துறை ஸ்தம்பித்து, சிறு, குறுந்தொழில்கள் நிலைகுலைந்துள்ளன. சம்பளம் கொடுக்க முடியாததால், தொழி லாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கே செல்கின்றனர். அரசு குறிப்பிட்ட தொகையைகூட வழங்க வங்கிகளில் பணம் இல்லை. தொழில் நிறுவனங்களுக்கான ஆர்டர்கள் 80 சதவீத அளவுக்கு குறைந்துவிட்டன. தமிழகம் முழுவதுமே இந்த நிலை நீடிக்கிறது. எனவே, இந்தப் பிரச்சினையைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

உற்பத்தி 50% குறைந்தது

கோவை மாவட்ட சிறு தொழில் சங்கத் தலைவர் வி.சுந்தரம் கூறும் போது, “தொழிற்சாலைகளில் 50 சதவீத உற்பத்தி குறைந்துவிட்டது. பல்லாயிரக்கணக்கான உற்பத்தி யாளர்களின் நிலை மட்டுமின்றி, லட்சக்கணக்கான தொழிலாளர் களின் எதிர்காலமும் கேள்விக்குறி யாகியுள்ளது. எனவே, தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகளில் பணம் எடுக்கும் அளவை குறைந்த பட்சம் ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும். தொழிலாளர்கள் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண் டும்” என்றார்.

3 நாட்கள் விடுமுறை

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் மு.வ.கல்யாணசுந்தரம் கூறும் போது, “பண மதிப்பு நீக்க அறிவிப்பு பிரச்சினையால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் வாரத்துக்கு 3 நாட்கள் வரை விடுப்பு அறிவித் துள்ளன. ஓவர்டைம் என்பதே இல்லாமல் போய்விட்டது. இந்த நிலை நீடித்தால், தொழில் துறை முற்றிலும் நசிந்துவிடும்” என்றார்.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத் தலைவர் எஸ்.ரவிக்குமார் கூறும் போது, “பெரும்பாலான வங்கிகள் குறிப்பிட்ட தொகையைகூட தராமல் அலைக்கழிக்கின்றன. மூலப் பொருள், உதிரி பாகங்கள் வாங்க முடியாமலும், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும் தவிக்கிறோம். எனவே, ஏடிஎம், வங்கிகளில் தேவையான அளவு பணத்தைப் பெற்றுக்கொள்ளவும், ரூ.500, ரூ.100 நோட்டுகள் போதுமான அளவு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில் வங்கிகளில் எடுத்த பணத்தை அடிப்படையாகக் கொண்டு, சராசரி தொகையை வழங்க வேண்டும்” என்றார்.

பல்லாயிரக்கணக்கான உற்பத்தியாளர்கள், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே, தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகளில் பணம் எடுக்கும் அளவை குறைந்தபட்சம் ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x