Published : 09 Jul 2014 11:56 AM
Last Updated : 09 Jul 2014 11:56 AM

அப்துல் கலாமை புறக்கணித்த ரயில்வே பட்ஜெட்

பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழாவின்போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ரயில்வே அமைச்ச கத்துக்கு வைத்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராமேசுவரம் தீவு பொது மக்கள் ஏமாற்றம் அடைந் துள்ளனர்.

பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா தொடக்க விழா கடந்த ஜனவரி 28-ம் தேதி பாம்பன் ரயில் நிலையம் அருகே நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அப்துல்கலாம் தெற்கு ரயில்வே நிர்வாக பொது மேலாளர் ராஜேஷ் மிஸ்ரா மற்றும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கே.ரஸ்தோகி ஆகி யோர் முன்னிலையில் ரயில்வே அமைச்சகத்துக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு புதியதாக ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் ஒரு புதிய தினசரி ரயிலை இயக்க வேண்டும். அதுபோலவே ராமேசு வரத்தில் இருந்து செல்லும் ஒவ்வொரு ரயிலிலும் மீனவர்கள் மீன்களைக் கொண்டு செல்வதற்காக பிரத்யேக ஐஸ் பெட்டி வசதி செய்து தர வேண்டும். மேலும் பாம்பன் ரயில் பாலத்தை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்.

ஆனால், முன்னாள் குடி யரசுத் தலைவர் அப்துல் கலாமின் கோரிக்கைகள் ஒன்றுகூட செவ் வாய்க்கிழமை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப் படாதது ராமேசுவரம் தீவு மக்களிடையே பெரும் ஏமாற் றத்தை அளித்துள்ளது.

அதே சமயம் ராமேசுவரம் - ஹரித்துவார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x