Published : 23 Jan 2023 10:54 AM
Last Updated : 23 Jan 2023 10:54 AM
சென்னை: உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன். இதனோடு, உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நமது நீண்டநாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு வரும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
I wholeheartedly welcome Hon'ble CJI's suggestion to make SC judgments available in all Indian languages. This along with our long-pending demand of allowing the use of State official languages in HCs will bring justice closer to the common people of our country. https://t.co/NA1G1Y4rQI
— M.K.Stalin (@mkstalin) January 23, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT