Last Updated : 01 Dec, 2016 12:26 PM

 

Published : 01 Dec 2016 12:26 PM
Last Updated : 01 Dec 2016 12:26 PM

பண மதிப்பு நீக்கத்துக்குப் பின்.. முதல் தேதியும் மக்கள் அவதியும்

பணமதிப்பு நீக்க அறிவிப்பு கடந்த மாதம் 8-ம் தேதி வெளியிடப்பட்டதால் அதற்கு முன்பாக பெரும்பாலான ஊழியர்கள் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து சம்பளப் பணத்தை எடுத்துவிட்டனர். இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) அரசு ஊழியர்களுக்கு சம்பள தினம் என்பதால் பலர் ஊதியத்தை எடுக்க வங்கி ஏடிஎம்களுக்குச் சென்றனர். ஆனால், பணம் இல்லாததால் பெரும்பாலான ஏடிஎம்கள் செயல்படவில்லை.

இதையடுத்து, பொதுமக்கள் வங்கிகளுக்குச் சென்றனர். வங்கிகளிலும் பரவலாக பணத் தட்டுப்பாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பளம் மற்றும் டெபாசிட் பணத்தை எடுக்க பொதுமக்கள் இன்று அதிகாலையிலேயே மழையையும் பொருட்படுத்தாமல் சென்னை திருவல்லிக்கேணி வங்கி ஏடிஎம்களில் குவிந்தனர். வழக்கம் போல் பணத்தட்டுப்பாட்டால் ஏடிஎம்கள் முடங்கின.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x