Published : 12 Dec 2016 09:14 AM
Last Updated : 12 Dec 2016 09:14 AM
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் போயஸ் கார்டன் இல்லத்தில் பணிபுரியும் பெண்ணின் தந்தை போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுக்கோட்டை ஆத்தியடிப்பட் டியைச் சேர்ந்த கே.பாலகிருஷ் ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நான் விவசாயத் தொழில் செய்து வருகிறேன். என் மகள் ரூபிகா, மறைந்த முதல்வர் ஜெய லலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக பணிப் பெண்ணாகப் பணிபுரிகிறார். போயஸ் கார்டனில் உள்ள அனைவரும் என் மகளை நன்கு கவனித்து வருகின்றனர்.
சீட்டுப் பணம் செலுத்த புதுப் பட்டிக்கு கடந்த டிசம்பர் 1-ம் தேதி காலை சென்றபோது சிலர் என் வாயில் துணியை திணித்து, கண்களைக் கட்டி காரில் கடத்தினர். கொல்லைகாடு கிராமத்துக்கு அழைத்துச் சென்று ரூ.5 கோடி கேட்டு மிரட்டினர். இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையால் தாக்கியதில் நான் பலத்த காயமடைந்தேன். இதை வீடியோவில் பதிவு செய்த அவர்கள், பின்னர் நான் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், மோதி ரத்தை பறித்துக்கொண்டு அனுப்பி னர். அப்போது ரூ.1.5 கோடி தரா விட்டால் தாக்கும்போது எடுக்கப் பட்ட வீடியோவை வாட்ஸ்அப், முகநூலில் வெளியிடுவதாகவும், குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்றும் மிரட்டினர்.
இதுபோல் ஏற்கெனவே 3 முறை சமூக விரோதிகளால் மிரட்டப்பட் டுள்ளேன். இது தொடர்பாக கறம் பக்குடி போலீஸில் புகார் அளித் தேன். இருப்பினும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை நவ.12-ம் தேதி நேரில் மிரட்டிய இருவரை பொதுமக்கள் பிடித்தனர். அவர்கள் என்னை இனிமேல் மிரட்டுவதில்லை என எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.
சிலர் என்னை குறிவைத்து செயல்படுகின்றனர். இதனால் எனது உயிருக்கும், சுதந்திரமாக நடமாடுவதற்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் என்னை தினமும் மிரட்டி வருகின்றனர்.
இதனால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு 6.4.2016-ல் புகார் அளித்தேன். இதுவரை பாது காப்பு வழங்கவில்லை. இதனால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் அவர் கூறியுள்ளார்.
இந்த மனு உயர் நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT