Published : 15 Dec 2016 10:09 AM
Last Updated : 15 Dec 2016 10:09 AM

தமிழகத்தில் 4 இடங்களில் அவசர சிகிச்சை பயிற்சி மையங்கள்: இயற்கை சீற்றக் காலங்களில் துரித சிகிச்சைக்காக ஏற்பாடு

அரசு மருத்துவர்களுக்கு அவசர கால சிகிச்சைக்கான சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில், தமிழகத்தில் 4 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தலா ரூ.1½ கோடி மதிப்பீட்டில் அவசர சிகிச்சை பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் சமீப காலமாக எதிர்பாராத புயல், கனமழை, மலைப்பிரதேசங்களில் மண் சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள், சாலை விபத்துகள் அதிகளவு நிகழ்கின்றன. இதில் காயமடை வோரை, ஆங்காங்கே இருக்கும் மாவட்ட அரசு மருத்துவமனைகள், தாலுகா அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவமனைகள், அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதனால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடநெருக்கடி ஏற்படுவதோடு, மருத்துவர்கள் பற்றாக்குறையாலும், துரித மருத்துவ வசதி கிடைக்காமலும் பலர் இறக்கின்றனர்.

சிலர் கொண்டு வரும் வழியிலே இறக்கின்றனர். இதை தவிர்க்க, நாடு முழுவதும் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு, அவசர கால சிகிச்சைக்கான சிறப்பு பயிற்சி அளிக்க மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

அதற்காக, நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் முக்கிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கான பயிற்சி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா ரூ.1½ கோடியில் அவசர சிகிச்சைக்கான பயிற்சி மையங் கள் அமைக்கப்படுகின்றன. முதல் கட்டமாக மதுரை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் இந்த அவசர சிகிச் சைக்கான பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை டீன் எம்.ஆர்.வைரமுத்துராஜூ கூறும்போது, இரண்டு இடம் தேர்வாகியுள்ளது. அரசு மருத்துவ மனை, தாலுகா அரசு மருத்து வமனை, ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவமனைகளில் மருத்துவர் களுக்கு அவசர சிகிச்சைக்கான போதுமான பயிற்சி இல்லை. அதனால், அவர்கள் இறப்பால் ஏற்படும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை களுக்கு பயந்து எல்லோரையும் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கின் றனர். இதை தவிர்க்கவே இந்த அவசர சிகிச்சைக்கான பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. இதற் காக மதுரையில் இருந்து 10 மருத்துவர்கள், சிறப்பு பயிற்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்கள் அங்கு பயிற்சி பெற்று, மற்றவர்களுக்கு இந்த பயிற்சி மையத்தில் சிகிச்சை அளிப்பார்கள், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x