Published : 20 Jan 2023 07:09 AM
Last Updated : 20 Jan 2023 07:09 AM

கிரிக்கெட் வீரர் சேவாக்குடன் இணைந்து `சிக்கன் பிக் பேக்' பர்கரை அறிமுகம் செய்த மெக்டொனால்'ஸ்

சென்னை: மெக்டொனால்'ஸ் இந்தியா நிறுவனம் அதன் அடையாளச் சின்னமான `சிக்கன் பிக் மேக்' என்ற பெயர் கொண்ட பர்கரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக்குடன் கைகோத்துள்ளது.

இதுகுறித்து மெக்டொனால்'ஸ் இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பு: `சிக்கன் பிக் மேக்' என்ற பெயரில் பெரிய அளவிலான பர்கரை மெக்டொனல்'ஸ் நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இது 3 டயர் பன்கள், 2 அடுக்குகளில் கிரிஸ்பி கோல்டன் பட்டீஸ், மொறுமொறுப்பான நறுக்கப்பட்ட லெட்டியூஸ், உருகும் சீஸ், சர்வதேச அளவில் தருவிக்கப்பட்ட ரகசிய சாஸ் மற்றும் கெர்கின்ஸ் ஆகியவை அடங்கிய 11 லேயர்களைக் கொண்ட பர்கர் ஆகும். இது தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெக்டொனால்'ஸ் இந்தியா (மேற்கு மற்றும் தெற்கு) சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பு பிரிவின் மூத்த இயக்குநர் ஆர்.பி.அரவிந்த் கூறும்போது, ``சிக்கன் பிக் மேக்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கால சலுகையுடனான இன்னுமொரு புத்தாக்கமான உணவாகும். வீரேந்திர சேவாக்கின் அளப்பரிய, தைரியமிக்க மற்றும் விளையாட்டுத்தனமான ஆளுமை எங்கள் பிராண்டுக்கு மிகவும் பொருத்தமானதென நினைக்கிறோம்'' என்றார்.

கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறும்போது, ``எனக்கு மிகவும் பிடித்தமான பிராண்டான மெக்டொனால்’ஸ் இந்தியா-வுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு முழுமையான மகிழ்ச்சியை அளிக்கிறது. சிக்கன் பிக் மேக்-ன்வருகையைக் கண்டு நான் மகிழ்ச்சிஅடைகிறேன். மேலும் இது அனைத்து சிக்கன் பர்கர் பிரியர்களுக்கும் புதிய தனிவிருப்பமாக மாறும் என்பதில் உறுதியாக உள்ளேன்” என்றார்.

சிக்கன் பிக் மேக் பர்கர் மெக்டெலிவரி செயலி மூலமும், மெக்டொனால்'ஸ் உணவகங்கள் முழுவதிலும் டைன்-இன் மற்றும் ட்ரைவ்-த்ரூ ஆகியவற்றிலும் கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x