Published : 19 Jan 2023 12:11 PM
Last Updated : 19 Jan 2023 12:11 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | அதிமுக கூட்டணியில் எந்தக் கட்சி போட்டி?- ஓரிரு நாட்களில் அறிவிப்பு; ஜி.கே.வாசன் பேட்டி  

செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள்

சென்னை: ஓரிரு நாட்களில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எந்தக் கட்சி போட்டியிடுவது என்று ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவெரா. கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்தது.

இதற்கிடையில், மேகாலயா உள்ளிட்ட 3 மாநிலத் தேர்தலுடன், 6மாநிலங்களில் காலியாக உள்ள, ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளிட்ட7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் நேற்றுஅறிவித்தது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 27-ல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக, திமுகவினர் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

2021 தேர்தலில் இந்த தொகுதி அதிமுக கூட்டணி சார்பில், தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தமாகா சார்பில் போட்டியிட்ட, கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா தோல்வியடைந்தார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமாகா, அதிமுக இடையில் இன்று (ஜன.19) ஆலோசனை நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உடன், அதிமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதன்பிறகு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில்," இடைத் தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வெற்றியை உறுதி செய்ய வேண்டியது கூட்டணி கட்சிகளின் கடமையாக உள்ளது என்பதை நாங்கள் அறிந்து உள்ளோம். இதற்காக அதிமுக மூத்த தலைவர்கள் என்னை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். 2 நாட்களுக்கு முன்பு நான் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து பேசினேன். தேர்தல் அறிவிப்பு வந்த உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். தற்போது அதிமுக தலைவர்கள் உடன் கலந்து பேசி இருக்கிறோம். எங்களின் இலக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு ஏற்றவாறு ஒரு சில நாட்களில் முடிவை அறிவிப்போம். கூட்டணி கட்சிகளின் ஒரே நோக்கம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். வேட்பாளர் யார் என்பது ஒரு சில நாட்களில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து பேசி அறிவிப்போம்." இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x