Published : 18 Jan 2023 07:28 AM
Last Updated : 18 Jan 2023 07:28 AM

விமானத்தில் அவசர கதவை திறந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவு: போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை

சென்னை: விமானம் புறப்படும்போது அவசர வழி கதவைத் திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இருந்து திருச்சிக்கு கடந்த டிச.10-ம் தேதி 70 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன் விமானம் தயாரான நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் இருந்த அவசர கால வழிக்கான கதவை பயணி ஒருவர் திறந்துள்ளார்.

பயணிகளுக்கு அச்சுறுத்தல்: இதையடுத்து விமானத்தில், விதிமுறைகளின்படி சோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகேவிமானம் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் பிற்பகல் 12.27 மணிக்கு தான் சென்னையில் இருந்து புறப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், ‘‘கடந்த டிச.10-ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக விமானம் புறப்படும்போது ஒரு பயணி அவசர வழிக்கான கதவைத் திறந்து பயணிகள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என கூறப் பட்டுள்ளது.

விமான நிறுவனம் விளக்கம்: இச்சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் தரப்பில் கூறும்போது, ‘‘விமானம் புறப்படும்போது தவறுதலாக ஒரு பயணி அவசர வழிக்கான கதவைத்திறந்துள்ளார். இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். விதிமுறைப்படி பொறியியல் ரீதியாகசோதனையிட வேண்டியிருந்த தால், விமானம் புறப்படத் தாமதமானது’’ என தெரிவிக்கப்பட் டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x