Published : 19 Dec 2016 09:26 AM
Last Updated : 19 Dec 2016 09:26 AM
முன்னாள் முதல்வர் ஜெய லலிதா கடந்த 5-ம் தேதி கால மானார். இதையடுத்து, முதல்வ ராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற் றுள்ளார். அவருடன் 31 அமைச்சர் களும் பதவியேற்றனர். அதே நேரத்தில் அதிமுக பொதுச்செயலா ளர் பொறுப்பை ஏற்பது யார் என்ற கேள்வி எழுந்தது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலாதான் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக மாவட்ட வாரியாகவும் அதிமுகவின் பிற அணிகள் சார்பிலும் தீர்மானங் களை நிறைவேற்றி வருகின்றனர். அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் விரைவில் சென்னையில் நடக்க உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செய் வது அதிகாரப்பூர்வமாக அறிவிக் கப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு சிலர் சசிகலா வுக்கு போஸ்டர்கள் மூலமும், சமூக வலைதளங்கள் மூலமும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலை தளங்களில் வரும் எதிர்ப்புகளை சமாளிக்கவும், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விளக்கும் வகை யிலும் 40 குறும்படங்களை தயாரிக் கப்பட்டு வருகின்றன. அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தென்சென்னை மாவட்டச் செயலா ளர் ராயல் ராஜா, ‘தி இந்து’விடம் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவருடைய அரசியல் சாதனை கள், அவர் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள், பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் குறித்து குறும்படங்களை தயா ரித்து வருகிறோம். ஏற்கெனவே எங்களிடம் இருக்கும் நூற்றுக் கணக்கான பழைய கோப்புகளில் இருந்து முக்கியமான பதிவுகளை வைத்து குறும்படங்களை தயாரித்து வெளியிட உள்ளோம். அவற்றை ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக வலை தளங்களில் தெளிவாக காணும் வகையில் வெளியிட உள்ளோம்.
பெரிய தொகுப்பாக வெளி யிட்டால் நேரம் ஒதுக்கி ஒரே நேரத் தில் மக்கள் பார்க்க சிரமப்படுவர். எனவே, சிறு சிறு தொகுதியாக வெளியிடவுள்ளோம். எதிர்க்கட்சி களை சேர்ந்த சிலர் சமூக வலை தளங்களில் திட்டமிட்டு நடத்தி வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்படும் குழப்பங்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில் எங்கள் அணி முழுமையாக செயல்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT