Published : 16 Jan 2023 11:45 AM
Last Updated : 16 Jan 2023 11:45 AM
சென்னை: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவர் வழிநின்று சமத்துவச் சமுதாயம் காண உழைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்," திருவள்ளுவர் நாளில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் இரணியன் நா.கு. பொன்னுசாமிக்கு அய்யன் திருவள்ளுவர் விருதையும், கவிஞர் கலி. பூங்குன்றனுக்கு தந்தை பெரியார் விருதையும், எஸ்.வி. ராஜதுரைக்கு அண்ணல் அம்பேத்கர் விருதையும், நாமக்கல் வேல்சாமிக்கு தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதையும், கவிஞர் மு. மேத்தாவிற்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதையும், முனைவர் இரா. மதிவாணனுக்கு தேவநேயப் பாவாணர் விருதையும் வழங்கி வாழ்த்தியதோடு, வள்ளலார் பல்லுயிர்க் காப்பகங்களுக்கான நிதி உதவியையும் அளித்தேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவ வழிநின்று சமத்துவச் சமுதாயம் காண உழைப்போம்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
வள்ளலார் பல்லுயிர்க் காப்பகங்கள் திட்டத்தின்கீழ் நிதியுதவியையும் அளித்தேன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவ வழிநின்று சமத்துவச் சமுதாயம் காண உழைப்போம். (4/4) pic.twitter.com/LoYISERqRO— M.K.Stalin (@mkstalin) January 16, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT