Published : 16 Jan 2023 08:15 AM
Last Updated : 16 Jan 2023 08:15 AM
மதுரை: பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை பாலமேடு, திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதிமொழியேற்பை நடத்தி வைக்க போட்டிகள் தொடங்கின.
பாலமேட்டில் பங்கேற்கும் 800 காளைகள்: உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் களத்தில் இன்று 800 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. காளைகளை அடக்க 355 இளைஞர்கள் முறைப்படி பதிவு செய்துள்ளனர். போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதலில் ஐய்யனார் கோயில் காலை உள்பட கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் காளைகள் அவிழ்க்கப்பட்டு வருகின்றன. பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் பரிசாக இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோல் வீரர்களுக்கு தங்கக் காசு, ரொக்கப் பரிசு, இருச்சக்கர வாகனம், சைக்கிள், பீரோ, வீட்டு உபயோகப் பொருட்கள் எனப் பல்வேறு கண்கவர் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
சூரியூரில் சீறிப்பாயும் காளைகள்: திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆட்சியர் பிரதீப்குமார் உறுதிமொழியை வாசிக்க வீரர்கள் உறுதிமொழியேற்க போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் 600 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. 400 வீரர்கள் குழுக்களாக களமிறங்குகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT