Published : 15 Jan 2023 02:19 PM
Last Updated : 15 Jan 2023 02:19 PM
சென்னை: "வெயில் மழை என்று பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கொண்டித்தோப்பில் உள்ள் காவல்துறையினர் குடியிருப்பில், காவல்துறையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். இது குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெயில் மழை என்று பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை கொண்டித் தோப்பு காவலர் குடியிருப்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில், காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்தார். மேலும், அங்கு சமைத்துக்கொண்டிருந்த பொங்கல் பானையில் பொங்கலைக் கிண்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
வெயில் மழை பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம்!#தமிழ்நாடு_வாழ்க pic.twitter.com/OFy1Zd8tku— M.K.Stalin (@mkstalin) January 15, 2023
இந்நிகழ்வில், தமிழக அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT