Published : 15 Jan 2023 07:14 AM
Last Updated : 15 Jan 2023 07:14 AM
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசியல், சமூகம், மொழி,கல்வி, கலை, கலாச்சார வளர்ச்சிக்காகவும், உரிமைகளை வென்றெடுக்கவும் பாமக நிறுவனர்ராமதாஸ் இதுவரை 34 அமைப்புகளை தொடங்கியுள்ளார். அதில் முதல்கட்டமாக 19 அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் வரும் 18-ம் தேதி காலை தைலாபுரத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில், ராமதாஸ் முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடக்க உள்ளது.
இதில் பாமக, வன்னியர் சங்கம், பசுமைத் தாயகம், சமூக முன்னேற்ற சங்கம், தொழிற்சங்கப் பேரவை, வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை, சமூக ஊடகப் பேரவை, உழவர்கள், படைப்பாளிகள் பேரியக்கங்கள், அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை, இளையோர் மேம்பாட்டு இயக்கம், வன்னியர் இன மான, உரிமை காப்பு அறிவுசார் பரப்புரை இயக்கம், அரசு அலுவலர் பணியாளர்கள் உரிமை நலச் சங்கம், ஆசிரியர்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம், இளைஞர், மாணவர், மகளிர், இளம்பெண்கள் சங்கங்கள் ஆகிய 19 அமைப்புகளின் தலைவர்கள், செயலாளர்களுடன், பாமக தேர்தல் பணிக்குழு, கொள்கை விளக்க அணிகளின் நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT